மிக விரைவில் சித்தன் கொட்டில் புதிய வடிவில்!!

Thursday, April 21, 2005


கடந்த மாதத் தொடக்க வாரத்தில் ebay இணைவலை ஏலவிற்பனையில் அபூர்வமான ஒரு சங்கதியைக் காணமுடிந்தது. மிகப்பழமையான இரண்டு தமிழ் அகராதிகளின் (ஆங்கிலம்-தமிழ்) முதற் பதிப்புகள் மற்றும் சில அகராதிகள், பழைய நூல்கள் என்று "சுவடிகள் சேகரிப்புப் பெறுமானம்" மிக்க சுமார் 25 நூல்கள் ஜெர்மனியில் இருந்து ஏல விற்பனைக்கு வந்திருந்தன. இதில் Miron Winslow அவர்களின் 1862 இல் வெளியிடப்பட்ட தமிழ் -ஆங்கில அகராதியும் 1910 இல் வெளியாகிய ஸ்ரீ கதிரவேற்பிள்ளை அவர்களது தமிழ்ச் சொல்லகராதியும் காணப்பட்டன.


இவை இரண்டினையும்விட தரங்கம்பாடியில் இருந்து வெளியான "சத்திய வேத புஸ்தகம்"( Holy Bible in Tamil, 1931, 1400 பக்கங்கள்), விஸ்வநாதபிள்ளை அவர்களின் மொழிபெயர்ப்பில் வெளியாகிய "ராபின்சன் குருசோ"(1906) மற்றும் "திருச்சபைச் சரித்திரம்" (History of the christian church, S. Zehme, 1914, 480 பக்கங்கள்) போன்ற தரங்கம்பாடி லூதர் மிசன் அச்சகத்தில் 1860 களில் இருந்து 1940 கள் வரை வெளியாகிய புத்தகங்கள் விற்கப்பட்டன.
ஏறிச் சென்ற விலையைப் பார்த்த போது என்னால் அதனை வாங்கிவிடமுடியாது என்று தெரிந்து போனது. ஆனால் தமிழ் அகராதிகளுக்கும் நூல்களுக்கும் இந்தவகை மதிப்பு வந்ததில் திருப்தியடைந்து கொண்டேன். விற்பனைக்கு வந்த நூல்களின் படங்களை இங்கே இணைத்துள்ளேன்.

2 Kommentare:

 1. >>ஏறிச் சென்ற விலையைப் பார்த்த போது

  எவ்வளவு கேட்டிருந்தார்கள்? சுட்டி கைவசம் இருந்தால் கொடுங்க...

  ReplyDelete
 2. அன்பு பாலா...தாமதத்திற்கு மன்னிக்கவும். இரண்டு ஏலங்கள் நடைபெற்றன. அவற்றின் இலக்கங்கள் கீழே உள்ளன. http://www.ebay.com என்ற பக்கம் சென்று கீழ்வரும் இரண்டு இலக்கங்களையும் ஒவ்வொன்றாகத் "தேடல்" பகுதியில் எழுதி மேலதிக விபரங்களைப் பெறுக.
  6513001288
  6512958338

  ReplyDelete