மிக விரைவில் சித்தன் கொட்டில் புதிய வடிவில்!!

Saturday, July 23, 2005

மெட்டி ஒலி

மெட்டி ஒலி பற்றி தமிழ் உலகம் அதிகம் பேசிக்கொள்கிறது.நான் மெட்டி ஒலியின் எந்தத் தொடரும் பார்த்த ஞாபகம் இல்லை. ஆனால் எங்காவது விருந்தாகச் சென்ற வேளைகளில் அந்தத் தொடரின் ஆரம்பம் ஒரு நடன விளம்பரத்துடன் தொடங்குமல்லவா. அந்த நடனத்தை எத்தனை முறை பார்த்தாலும் எனக்குச் சலிப்பதில்லை. அந்த நாட்டிய தாரகையின் பெயர் தெரியவில்லை. மெட்டி ஒலியின் தொடக்கமும் முடிவும் எனக்கு அதுவே.

5 Kommentare:

 1. அந்த பாடல் கூட நல்ல ஒரு பாடல். நித்யசிறீ பாடியிருந்தாங்க. நல்ல அர்த்தம் பொதிந்ததும் கூட.

  ReplyDelete
 2. சாந்தி
  (என்று நினைக்கிறேன்:)

  மெட்டி ஒலி பாடலுக்குப் பிறகுதான் அவ்ங்க பல படங்களில் பெரும்பாலும் கதாநாயகனுக்கு அருகிலேயே ஆடும் அளவுக்கு பிரபலம் என்பது தெரியும். உதாரணத்துக்கு ஓ... போடு பாட்டு பாருங்க, விக்ரம் பின்னாலும் - பல பாடல்களில் விஜய் பின்னால், சில பிரபுதேவா பாடல்களில் பார்க்க முடியும்...

  ReplyDelete
 3. கயல்விழி...கோவித்துக் கொள்ளாதீர்கள் எனக்கு அந்தப் பாடலின் கருத்துக்களோடு உடன்பாடு கொள்ள முடியவில்லை. பெண்ணடிமைத்தன விருட்சம் விதையாக்கித் தரப்படுகின்ற பாடல் அது. ஆனால் அந்த நாட்டியப் பெண்ணின் அசைவுகள் அபாரம். அன்புவின் தகவலுக்கு மிக்க நன்றி. பாடலின் கருத்துக்கேற்ப நாட்டிய நடிப்புக்கு நான் எப்போதும் சாந்தியைச் சிபார்பு செய்வேன். உண்மையில் அவர்கள் பெயர் சாந்தியா?

  ReplyDelete
 4. ஆமாம், வைரமுத்துவின் அந்தப்பாடல் 'அர்த்தம்' பொதிந்தது தான். அவ்வர்த்தங்கள் சொல்லும் கருத்துக்களுக்காக அர்த்தமே இல்லாத பாடல்கள் அதைவிட மேல்.

  ReplyDelete
 5. please send this question to vikatan or kumudam.they are the ones who keep track of all this.
  btb i too think that her name is
  shanthi as i remember to have read in vikatan aboût this :)

  ReplyDelete