மிக விரைவில் சித்தன் கொட்டில் புதிய வடிவில்!!

Sunday, September 18, 2005

ஜக்கடையா-Yakkadaya

இலங்கையில் „யக்கடையா“ ; „மறுசீறா“(„சீனா“) போன்ற தனிமனிதர்களின் காரணப் பெயர்களும் இடுகுறிப் பெயர்களூம் அவர்களது வரலாறு காரணமாக முழு இலங்கையிலும் கொடூரமான நபர்களைச் சுட்டுவதற்கு ஆகுபெயராகிப் போயின. „யக்கடையா„ என்பது „இரும்பு மனிதன்“ என்ற பொருளில் விளங்கிக் கொள்ளப்படுகிறது. சந்தனக் கட்டை வீரப்பன்; மான் சிங்; பூலாந்தேவி போன்ற பெயர்களுடன் இந்த „ஜக்கடையா“ என்ற பெயரையும் ஒப்பிடலாம். அண்மையில் இந்த யக்கடையாவின் சரிதை இலங்கை ஆங்கிலத் தினசரி ஒன்றில் வெளியாகியிருந்தது. யக்கடையாவுக்கு இப்போது 103 வயது. இலங்கையின் ஜனாதிபதியை ஒரு முறை சந்தித்துவிடவேண்டும் என்ற ஆவலில் கொழும்புக்கு வந்துள்ளதாக அவனது கதையை எழுதும் பத்திரிகையாளர் குறிப்பிடுகின்றார். தன் கிராமத்துச் சமகாலப் பள்ளிமாணவி ஒருத்தி, இரண்டாம் உலகயுத்த காலத்தின் போது இலங்கையில் நிலைகொண்டிருந்த சில ஆபிரிக்கச் சிப்பாயிகளினால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுக் கொல்லப்பட்டதால், ஆத்திரமடைந்த ஜக்கடையா 96 ஆபிரிக்காவைச் சேர்ந்த சிப்பாய்களையும் ஒரு ஆங்கில அதிகாரியையும் கொலை செய்திருக்கின்றான். இதைவிட ஒரு தமிழ் அஞ்சல் அதிபரையும் கொன்றிருக்கின்றான். இந்தியாவில் பலகாலம் மறைவாக இருந்துவிட்டு இப்போ இலங்கையில் வசித்து வருகின்றானாம். ஆங்கிலக் காலனித்துவதுகுட்பட்ட ஆபிரிக்காவைச் சேர்ந்த நாடுகளின் சிப்பாய்கள் 1930களின் இறுதியில் இலங்கையின் வடபகுதியில், குறிப்பாக யாழ்ப்பாணத்தில் நிறையவே இருந்தனர் என்று முதியவர்கள் சொல்லக் கேள்விப்பட்டிருக்கின்றேன்.

5 Kommentare:

 1. சித்தரே,

  கொப்பெகடுவா என்ற ஒரு பெயர் முன்பெல்லாம் தினசரிகளில் வரும். இலங்கையில் காவல்துறையில் இருந்தவர் என்று நினைவு. யார் இவர்?

  ReplyDelete
 2. வணக்கம் இரா. முருகன்! ஆம், ஜெனரல் தென்சில் லக்ஸ்மன் கொப்பேகடுவ இலங்கை இராணுவ அதிகாரி. 1990 களின் ஆரமபத்தில் இருந்தே இலங்கையின் வட பகுதியில் இடம்பெற்ற பல தாக்குதல்களைத் திட்டமிட்டவர். யாழ்ப்பாணத்தில் இருந்து ஊர்காவற்துறை(Kayts-ஒல்லாந்தர் இட்டபெயர்) என்ற இடத்திற்குச் செல்லும் வழியில் உள்ள அராலி என்ற இடத்தில் 1992 இல் குண்டுவெடித்ததில் கொல்லப்பட்டார். 1990 களில் இல் இருந்து அடிக்கடி ஊடகங்களில் பேசப்பட்ட பெயர் இது.

  ReplyDelete
 3. கொப்பேக்கடுவ, மிகமூர்க்கமான இராணுவத்தளபதியென்று பெயர்பெற்றவர். அதேநேரம் மிகத்திறைமையானவராகவும் அடையாளங்காணப்பட்டார்.
  அவர் இந்திய இராணுவ வருகைக்கு முன்பேயே பிரபலம்.
  புலிகளின் மூத்த உறுப்பினர்களின் கூற்றுப்படி கிளிநொச்சி மாவட்டத்தில் கொப்பேக்கடுவவின் புகழ் ஓங்கியிருந்தது. அந்தப் பெயருக்கே பயங்கரமான பயம் ஏற்படுவதாகச் சொல்வர்.
  கொப்பேக்கடுவ கொல்லப்பட்டதன்மூலந்தான் யாழ்ப்பாணம் அரசபடைகளிடம் வீழ்ச்சியுறு 3 அண்டுகளுக்கும் அதிகமாக எடுத்தது. அவர் இருந்திருந்தால் நிலைமை வேறு என்பதே பலரின் கணிப்பு.

  இதில் என்ன முரண்நகையென்றால் புலிகள் அராலிக்கண்ணிவெடித்தாக்குதலைத் தாமே செய்ததாக வெளியிட்டபின்பும் அதில் உட்சதி இருப்பதாக விசாரணைகள் நடைபெற்றது தான்.

  ReplyDelete
 4. சித்தர்,
  ஆபிரிக்காவைச் சேர்ந்த வீரர்களின் ஓரிரு பரம்பரையினர் (கலப்புமணத்தினால்) திருகோணமலையிலும் இருக்கின்றார்கள். இப்படியான ஓர் ஆபிரிக்கவீரர் மீது காதல் கொண்ட ஒருத்தி பின்னர் பெண்களின் விடுதி நிகழ்த்தியது என்பது குறித்து ஒரு கதை (ஓரளவுக்கு நடந்ததோடு ஒத்தது) ஒன்றும் வந்திருக்கின்றது.

  அண்மையில் வரலாற்றுத்திருகோணமலை எழுதிய உங்கள் நாட்டுக்காரர் சரவணபவனும் இவ்வாபிரிக்கர்கள் குறித்து எழுதியிருக்கின்றார்.

  பி.கு: அடிக்கடி செம்மையோ பசுமையோ கள்ளுக்குடியுங்கோ. அப்பதான் எழுதுவீங்கள்.

  ReplyDelete
 5. அப்பனே அநாமார்த்தா !
  அற்றைத் திங்களை எண்ணிப்பார்க்கிறேனடா!
  வெண்நறை ஊறி வெள்ளமெனப் பாய்ந்ததடா
  காலையும் மாலையும் தேன் கள் அருந்திப்போனதடா
  நிலவு தழைத்தாடி வெறித்தெறித்து ஓய்ந்ததடா
  தொல்லையிலும் பிறவி சூழும் தழை நீக்கி
  அல்லல் அறுத்து ஆனந்தமாய் வாழ்வமென்று
  இங்கெ வந்து கொட்டினேடா.
  இதுவோ நிலவறியாக் கொட்டிலடா
  தன் நிறமறிந்த சேரியடா
  கண்ணோடு கண்ணோக்கி
  கட்குவளை அதரங்கள் மோதி
  பசுநறையும் செங்கள்ளும் பருகி
  எழுதடா எழுதென எழுதத் துணிந்தேன்
  நீயும் உய்யடா உய்.

  ReplyDelete