மிக விரைவில் சித்தன் கொட்டில் புதிய வடிவில்!!

Monday, March 13, 2006


புஸ்பா பயணிக்கிறான்!

தோழியரே, தோழர்களே!

ஈழப்போராட்டத்தின் ஆரம்ப கர்த்தாக்களில் ஒருவரும் "ஈழப் போராட்டத்தில் எனது சாட்சியம்" என்னும் சர்ச்சைக்குரிய நூலின் ஆசிரியரும் இலக்கியச் சந்திப்பின் பங்காளரும் ஒத்தோடாதவருமான தோழன் அல்லது அண்ணன் சின்னம்மா சிதம்பரி புஸ்பராஜா தனது 54 வருட ஸ்தூலத்தை விட்டுப் பயணிக்கிறான்.


மூளையைப் புறந்தள்ளி
நெஞ்சுக் கூட்டால் நினைக்கிறேன்
உனது மரணத்தில் உனது மரணத்துக்காக விழி சொரிகிறது
உனது நினைவுத் தடப் பதிப்பில் அது தேங்குகிறது
அதன் கீழ்
வித்தொன்று நீருக்காய்த் தவம் இருக்கலாம்
வழியனுப்பல் தவிர என்ன முடியும் எம்மால்
வாழ்வு என்பதே விசித்திரமானது முரண்பாடுள்ளது
முரண்பாடுகளே வாழ்வியல் நியதி
சமாதானம் என்பது சுதந்திரமானது
சுதந்திரம் என்பதே விடுதலை என்பது
விடுதலை என்பது
சிறைகளைத் தகர்த்தல்
பிரக்ஞை கொண்டிருத்தல்
சிந்தனை செய்தல்
சிந்தனை செய்வதைப் பகிர்ந்திட முடிதல்
புரிதல் சகித்தல் இசைவொடு வாழ்தல்
இன்னமும் பச்சை தெரியாப் பாலையில்
தொடர் நகர்வை வாழ்ந்தவனே
எங்கள் கூட்டுக் குரல் தகிப்பு
உனை வழி மொழியும் போய் வா நண்ப!

ராசன் றஜீன்குமார், 10.03.2006

0 Kommentare:

Post a Comment