மிக விரைவில் சித்தன் கொட்டில் புதிய வடிவில்!!

Sunday, May 14, 2006

புது யுகம்


„…Von den neuen Antennen kamen die alten Dummheiten…“

புது யுகம்

புதுயுகம் ஒருமுறை மட்டும் தொடங்குவதில்லை
என் பாட்டன் வாழ்ந்து முடித்ததும் நவீன காலம் தான்
என் பேரன் வாழப்போவதும் இதே பழையதில் தான்

புதிய மாமிசம் பழைய முள்ளுக்கரண்டியால் சாப்பிடப்படும்.

தானியங்கி வாகனங்கள் இல்லை; தாங்கிகளும் இருக்கவில்லை
எங்கள் கூரைகளின் மேலான விமானங்கள் இல்லை; குண்டுகள் இருக்கவில்லை.

புதிய அன்ரனாக்களில் இருந்து அதே பழைய முட்டாள்தனங்கள் வெளிப்படுகின்றன
அறிவு வாய் மூலமாகவே வழிவழி காவப்படுகிறது.
- பெர்டோல்ட் பிறெஸ்ட்

******************
Die neuen Zeitalter

Die neuen Zeitalter beginnen nicht auf einmal.
Mein Großvater lebte schon in der neuen Zeit.
Mein Enkel wird wohl noch in der alten leben.

Das neue Fleisch wird mit den alten Gabeln gegessen.

Die selbst fahrenden Fahrzeuge waren es nicht
Noch die Tanks.
Die Flugzeuge über unseren Dächern waren es nicht.
Noch die Bomber.

Von den neuen Antennen kamen die alten Dummheiten.
Die Weisheit wurde von Mund zu Mund weitergegeben.
-Bertolt Brecht

பிரெஸ்டின் கவிதைகளில் எனக்கு இந்தக் கவிதையும் பிடிக்கும். அதிலும் இறுதி வரிகள் இன்றைய ஊடகங்களின் மீதான நோக்கில் இன்னும் பிடிக்கும்.

0 Kommentare:

Post a Comment