மிக விரைவில் சித்தன் கொட்டில் புதிய வடிவில்!!

Sunday, May 14, 2006

சில்லு மாற்றுதல்


சில்லு மாற்றுதல்

வீதியின் ஓரமாய்க் குந்தியிருக்கிறேன்
சாரதி சில்லு மாற்றுகிறார்.
எங்கிருந்து வந்தேனோ அங்கும் விருப்பமில்லை
எங்கு போகிறேனோ அங்கேயும் விருப்பமில்லை
பின் எதற்கு
இந்தச் சில்லுமாற்றலைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன்
பொறுமையற்று?

- பெர்டோல்ட் பிறெஸ்ட்

DER RAD WECHSEL

Ich sitze am Straßenrand,
Der Fahrer wechselt das Rad,
Ich bin nicht gern, wo ich herkomme.
Ich bin nicht gern, wo ich hinfahre.
Warum sehe ich den Radwechsel
mit Ungeduld?

-Bertolt Brecht

எளிமையான ஒரு கவிதை. 1953 ம் ஆண்டளவில் எழுதப்பட்டது. வாகனம் பழுதடைந்து நெடுஞ்சாலையில் காத்திருக்கும் போதெல்லாம் இந்தக் கவிதை நினைவில் வந்து போகும். எமக்கு ஏற்படும் பொருட்டற்ற பொறுமையின்மையக் கேள்விக்குள்ளாக்குகின்றதா இக்கவிதை? அல்லது போகுமிடம் மேல் வருகின்ற முதன் மனோநிலை இப்படித்தான் எல்லோருக்கும் இருக்கும் என்பதைச் சொல்கிறதா? எப்படியாயினும் மனம் கேள்விகளை எழுப்பிக்கொண்டே இருக்கிறது. சில்லு மாற்றுதல் வாகனத்திற்கா அல்லது மனதிற்கும் அவசியமா? சில்லு மாற்றுதல் ஒரு முடிவற்ற நிகழ்வின் இடையமைவா?

0 Kommentare:

Post a Comment