மிக விரைவில் சித்தன் கொட்டில் புதிய வடிவில்!!

Sunday, June 11, 2006

கரவைதாசன்:புல் நுனி தூங்கும் பனியோடும் பேசு!

புல் நுனி தூங்கும் பனியோடும் பேசு.


-- கரவைதாசன்--

அன்பின் தம்பி
எவர்க்கும் போல் எனக்குக் கிடைத்தன்வே
இப்படிச் சொல்லக்
காரணமாகின்றன.

முன் பின் அறியா இருட்டு
அறைக்குள் அடைக்கப்பட்ட பூனையாய் - நீ
உணருகின்றபோது
எனக்குள் ஈரமற்ற மழை.

வாழ்வு
மூழ்கிக் கரைவதற்கு மட்டுமல்ல.
மீண்டும்! மீண்டும்!
முளைத்து உயிர்ப்பதற்காய்.

ஒரு நுனிப் புல்லோடும்
அதில் தூங்கும் பனியோடும் பேசு.
எதையும் சந்தேகத்தோடு தேடு – படி
புரிந்து கொண்டே பேசு.

மதங்களுக்குள் மனங்களைத் தேடாதே!
மனங்களுக்குள் மதங்களைத் தேடு!
புரிந்து கொண்டே பேசு.

துகள்களைத் துடைத் தெறிந்திட - என்னிடம்
ஒரு பொட்டுத் துணி இல்லை.
மண்ணைப் புரட்டிட – உன்னிடம்
கத்தி, கடப்பாரி, கலப்பை
எல்லாம் உண்டு.

எல்லாம் எல்லோர்க்குமானால்
எனக்கும் சந்தோசம்.

இறுதியாக
ஓர் வேண்டுகோள்!
எதிரியின் பாசறைக்குள்
என்னைத் தேடாதே!
ஓடுகின்ற நதியில்
காணுகின்ற நிலவு – நான்

நான் சிறகை விரிப்பது
பறப்பதற்கு மட்டுமல்ல
உன்னை அணைப்பதற்கும் தான்.

4 Kommentare:

 1. செ.கா சித்தன் = செங்கள்ளுச் சித்தன் ?

  ReplyDelete
 2. ஆம், செகசித்தன் = செங்கள்ளுச் சித்தன்

  ReplyDelete
 3. பழகிய பெயராய் இருக்கிறது .
  Did u write anything in forumhub of other similar forums under this
  name before .

  ReplyDelete
 4. திண்ணை, பதிவுகள் விவாதக் களங்களில் வந்து சென்றதுண்டு.

  ReplyDelete