மிக விரைவில் சித்தன் கொட்டில் புதிய வடிவில்!!

Wednesday, August 30, 2006

நல்ல சேதி: கடத்தப்பட்ட குருபரன் விடுதலை!!

நேற்று, 29.06.06 அதிகாலை கடத்தப்பட்ட பத்திரிகையாளர் குருபரன் அவர்கள் இன்று காலையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். இது இந்த ஆகஸ்ட்டின் நல்ல சேதி. அவரைக் கடத்தியவர்கள் பற்றிய தகவல்கள் எதுவும் இன்னமும் கிடைக்கவில்லை. இவரது கடத்தலைக் கண்டித்தும், விடுதலை செய்யக் கோரியும் இலங்கையின் சுதந்திர பத்திரிகையாளர் இயக்கம், இலங்கை ஊடகவியலளர் சங்கம், முஸ்ஸிம் ஊடகங்களின் சபை, தென்னாசிய சுதந்திர ஊடக சங்கத்தின் இலங்கைக் கிளை, இன்னும் அனேக சிறு கட்சிகளின் பத்திரிகையாளர்கள், அணிசேராத உதிரிப் பத்திரிகையாளர்கள் என்று அனேகர் கொழும்பு கோட்டைப் புகையிரத முன்றலில் ஆர்ப்பாட்டங்களை நடத்தினர். இலங்கையின் சுதந்திர பத்திரிகையாளர் இயக்கத்தின் தலைவர் சுனந்த தேசப்பிரிய, சர்வதேச பத்திரிகையாளர் சம்மேளனத் தலைவர் கிறிஸ்தோபர் வோறன் போன்றோரின் குருபரன் அவர்களின் விடுதலைக்கான முன்னெடுப்புகளுக்கு நாம் தலைவணங்குகின்றோம்.

1 Kommentare:

  1. சிங்களம் பேசியவர்கள் கடத்தியபடியால் குருபரன் கண்ணியமாக விடுதலை செய்யப்பட்டார். தம்ழ் பேசியவர்கள் கடத்தியிருக்க மாட்டார்கள், விசாரித்திருக்க மாட்டார்கள்..........

    ReplyDelete