மிக விரைவில் சித்தன் கொட்டில் புதிய வடிவில்!!

Sunday, April 08, 2007

Protest

கண்டனம்
பிரான்சின் பாரிஸ் புறநகர்ப்பகுதியில் உள்ள „உயிர்நிழல்“ ஆசிரியர் லக்ஷ்மி அவர்களது வீட்டில் சுமார் இருபது வருடங்களாகப் பிரக்ஞை பூர்வமாகச் சேகரிக்கப்பட்ட ஆவணங்கள், புகைப்படங்கள் கொள்ளையிடப்பட்டுள்ளன. கொள்ளையிட்டவர்கள் முக்கியமாக இலக்கியச் சந்திப்பு மற்றும் சுதந்திரமான அமைப்புக்களால் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டங்களின் பதிவுகள் போன்றவற்றையே குறிப்பாக எடுத்துச் சென்றுள்ளனர். இதனால் கொள்ளயிட்டவர்களின் நோக்கம் கருத்துப் பரிமாற்றத்தின் மீது பயப்பீதியினை ஏற்படுத்துவதும் மற்றும் புலிகளின் சர்வதேச புலனாய்வுத்துறைக்கான ஆளடையாள ஆவணங்கள் போன்றவற்றுக்கே என்பதும் எங்களுக்குப் புரியவேண்டும் என்ற வகையில் தான் கொள்ளையர்கள் தடயங்களை விட்டுச் சென்றிருக்கின்றனர். கொள்ளையின்போது எவராவது எதிர்ப்பட்டிருந்தால் இவர்கள் கொன்றிருப்பார்கள் என்பதுவும் எங்களால் புரிந்துகொள்ளப்படுகின்றது. எங்களில் ஒருவனான சபாலிங்கத்தைக் கொன்ற போதும் கருத்துச் சுதந்திரத்திற்கும் அடிப்படை மனித உரிமைகளுக்கும் மற்றும் மனித இறைமைக்கும் குரல் கொடுக்கும் அனேகரைக் கொன்ற போதும் கூட நாங்கள் ஓய்ந்துவிடவில்லை. எழுந்து நிற்பதற்கான ஆத்ம பலமும் தார்மீகமும் இன்னும் எத்தனை உத்தரிப்புக்கள் வந்தாலும் எங்களிடமிடருந்து கொள்ளையடிக்கப்படமுடியாது என்பதை இன்னும் ஒருமுறை பாசிசப் புலிகளுக்குச் சொல்லிவைக்க விரும்புகின்றோம்.

சுசீந்திரன்
„நூல்“ வெளியீட்டகம் சார்பாக

0 Kommentare:

Post a Comment