மிக விரைவில் சித்தன் கொட்டில் புதிய வடிவில்!!

Monday, December 17, 2007

சிந்தனை பரா

சிந்தனை பரா (16.12.1935 - 16.12.2007)
„பரா மாஸ்டர்“ என்று எங்களால் செல்லமாக அழைக்கப்பட்ட திரு குமாரசாமி பரராஜசிங்கம் அவர்கள் தனது 72 ஆவது வயதில் 16.12.2007 இல் பெர்லினில் மாரடைப்பு காரணமாகக் காலமானார். இலங்கையில் இடதுசாரி அரசியலிலும், தொழிற்சங்க அரசியலிலும் நீண்டகால அனுபவம் மிக்க பரா அவர்கள் 1983 இல் இருந்து ஜெர்மனியில் ஸ்ருட்கார்ட் நகரத்திலும், பின்னர் 1997 இல் இருந்து தன் குடும்பத்தினருடன் பெர்லினில் வசித்தார். 1985 இல் இருந்து „சிந்தனை“ என்ற சஞ்சிகையின் ஆசிரியராக இருந்தார். அரசியல் கட்டுரைகள், ஆய்வுக்கட்டுரைகள், சிறுகதைகள், விமர்சனங்கள், முற்போக்கு அரசியல், அரசியல் –இலக்கியக் கூட்டங்கள், குறும்படவிழாக்கள் என்று பரா எப்பொழுதும் உற்சாகமாக இயங்கிக் கொண்டிருந்தவர்.
கணக்கியல், கணணியியல் போன்றவற்றில் நீண்டகால ஆசிரிய அனுபவமுடைய பரா அவர்கள் புகைப்படக் கலைஞனாகவும் இருந்தார். பௌதிகவியலில் பல்கலைக்கழகப் பட்டப்படிப்புக்குப் பின் கணக்காளராக இலங்கை மீன்பிடிக் கூட்டு ஸ்தாபனத்தில் நீண்டகாலம் சேவையாற்றினார். இவர் „பரா குமாரசாமி“ என்ற பெயரிலும் ஆங்கிலமொழிக் கட்டுரைகள் பல எழுதியுள்ளார். பரா எப்பொழுதும் சமூக அக்கறை கொண்டவராக சமூகத்தின் பிற்போக்குத் தனங்கள் மீது கறாரான விமர்சனங்கள் கொண்டவராக, துணிச்சலான அரசியல் விமர்சனங்களை முகமனற்று முன்வைப்பவராக இருந்தார்.
1988 இல் தொடங்கிய இலக்கியச் சந்திப்பின் மிக முக்கிய செயற்பாட்டாளராக விளங்கிய பரா பன்முகத் தன்மையை எல்லா விடயங்களிலும் உள்ளடக்கிய, சுதந்திரமான கருத்துப் பரிமாற்றத் தளங்களை உருவாக்கவேண்டுமென்பதில் ஒரு போராளியாகவும் இருந்திருக்கின்றார். சில மாதங்களுக்கு முன்னர் கனடாவில் நடைபெற்ற „சமாதானத்துக்கான கனடியர்கள்“ ஒழுங்கு செய்த பேச்சரங்கிலும், பிரான்ஸ் தலித் மேம்பாட்டு மையம் ஒழுங்குசெய்த தலித் மகாநாட்டிலும் பேராளராகக் கலந்து கொண்டார்.
இலங்கையில் இருந்து இடம்பெயர்ந்தோருக்கான சர்வதேச வலைப்பின்னல் (INSD), இலங்கை ஜனநாயகப் பேரவை (SLDF)போன்ற புகலிட அமைப்புக்களில் ஆர்வத்துடன் செயற்பட்டார். யாழ்ப்பாணம் நல்லூரில் பிறந்த திரு பரராஜசிங்கம் அவர்கள் மல்லிகாவின் கணவர். சந்தூஸ்குமார், உமா ஷாணிக்கா அவர்களின் தந்தை. ஜீவமுரளி, தினேஷா ஆகியோர் இவரது திருமணவழி மருமக்கள். இவரின் பெற்றோர் குமாரசாமி , மனோன்மணி. சிந்து,சே சக்தி குமார், அன்னம்-வெண்ணிலா இவரது பேரப் பிள்ளைகள். இவரது சகோதரர்கள் இரத்தினேஸ்வரி கணேஷ், ஜெயக்குமாரி இளங்கோ ஆகியோர் கனடாவில் வசிக்கின்றனர்.

குழந்தை மனம் கொண்ட பரா அவர்கள் எல்லா வயதினருடனும் மிகுந்த நட்பு பாராட்டுபவராக, சிறியவை என்று பாராமுகமாக ஒதுக்கப்படும் விடயங்களிலும் பார்வை குவிப்பவராக கலக்கமற்ற மனமும் கவலையற்ற லோகாதாய வாழ்வும் வாழ்ந்துவிட்டு சென்றே விட்டார். இலங்கையின் கடந்த கால அரசியல், சமூக வரலாற்றின் ஒரு நல்ல பொக்கிஷத்தை நாம் இழந்து நிற்கின்றோம்.

ந. சுசீந்திரன்

3 Kommentare:

 1. Our Friend Guru Comrade Phylosopher Guide Para

  the Sudden disappearance of your ringing voice, soothing words, and tranquilizing cool smile

  Cause me an undiscribable pain.

  P.Karunaharamoorthy, Berlin

  ReplyDelete
 2. A reply will never be received .

  I sent a birthday card electronically on 16.12.07. Asked his TP nr to discuss on poverty alleviation. Awaited for 2 days no reply. Rang our common friends Yogaratnam in Paris and Jeyakumar at Stuttgart, but could not get at them. While searching my old correspeondence with Para to get his Tp nr Rajan called to telll me the demise of com Para.
  We both were in the same political party and the Trade Union, but was fortunate to meet Para in Stuttgart last yr. However he claimed great comradeship and the right to addressed me as comrade with close affection and respect.
  He strongly supported and demanded the right of Northern Muslims to return to their place of origin. His devotion to Ilakkiya Santhippu is unparallel. Many of his other activities towards the left politics of SriLanka and the world witness in his demise, as a loss that is irreparable.
  May his soul attain Sivapatham.
  My deepest condolences to his wife and children on behalf of the Muslims of the North for whose cause he did his best.

  Rauf Mohamed Cassim
  Oslo, Norway
  25.12.07

  ReplyDelete
 3. A reply will never be received .