மிக விரைவில் சித்தன் கொட்டில் புதிய வடிவில்!!

Monday, December 17, 2007

பரா குமாரசாமி

(ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி- பத்மநாபா வெளியிட்டுள்ள அறிக்கை)

இலங்கை சம சமாஜக்கட்சியில் தனது அரசியல் பயணத்தை தொடங்கிய தோழர் பரராசசிங்கம் அவர்களின் திடீர் மறைவு (16.12.2007) எமக்கு ஆழ்ந்த வேதனையை ஏற்படுத்துகிறது. அவர் 45 ஆண்டுகளுக்கு மேலாக சமூகப் பணியாற்றியவர்.

இலங்கை வர்த்தக ஊழியர் சங்கம், புரட்சிகர மார்க்சியகட்சி, நீதிக்கும் சமத்துவத்ததுக்குமான இயக்கம், புலம்பெயர் தளத்தில் 80களின் நடுப்பகுதியலிருந்து சிந்தனை சஞ்சிகையை வெளிக் கொணர்ந்தது. தேசிய ஒடுக்குமுறைக்கு எதிரான இயக்கத்தில், சமூக மாற்றம் விளைந்த சக்திகளுடன் தன்னை அடையாளப்படுத்தியது, புகலிடத்தில் பாசிசம் தனது குணங்குறிகளை வெளிப்படுத்தத் தொடங்கிய போது ஜனநாயக இடைவெளியை உருவாக்கும் விதமான இலக்கியச் சந்திப்பு ஒன்றுகூடலை சக முற்போக்காளர்களுடன் ஆரம்பித்து வைத்து அதனைத் தொடர்ந்து, பெண்கள் சந்திப்பு அரங்கின் உருவாக்கத்தில் பங்களிப்பு வழங்கியது, இலங்கையில் இனங்களின் உரிமைகள் நிலைநாட்டப்படுவது, சமூகங்களிடையே ஐக்கியத்தை உருவாக்குவதற்கான தேடலில் இடையறாது ஈடுபட்டது என அவர் ஒரு விரிவான தளத்தில் செயற்பட்டார். ஒரு சர்வதேசியவாதி .

70களின் பிற்பகுதியில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டவர்கள் தொடர்பாக அந்த பயங்கரமும், இருள் மண்டியதுமான சூழ்நிலைகளில் பாதிக்கப்பட்டவர்களின் மனைவி பிள்ளைகளின் நலன், சட்ட உதவி தொடர்பில் அவர் பல காரியங்களை துணிச்சலுடன் ஆற்றியவர் 1977 இலும் 1981 இலும் அரச பயங்கரவாதம் வடக்கு-கிழக்கில் கோரத்தாண்டவமாடியபோது தோழர் பராவின் வீட்டில் தெற்கில் இருங்து வந்த இடதுசாரிகளும், மனித உரிமை வாதிகளும், வடக்கின் சமூக, மனித உரிமை அமைப்புக்களைச் சோந்தவர்களும் ஒன்று கூடினர் . போராட்டத்தின் திசை வழி எப்படி இருக்க வேண்டும் என்பதில் இளம் சோசலிஸ்டுகளுக்கு அவர் வழிகாட்டியாகத் திகழ்ந்தார்.
மனித மனங்களை தார்மிக வலு உள்ளதாக மாற்றுவதிலும், தேடல் உணர்வைத் தூண்டுவதிலும் அவர் சிறந்த பங்களிப்பை வழங்கியவர். அவர் தொழிலாளி வர்க்க இயக்கத்திற்கும், தேசிய விடுதலை, சாதி ஒடுக்குமுறை, பெண்விடுதலை இயக்கங்களிடையேயான இயங்கியல் தொடர்பு, அதிகாரத்துவ கட்டமைப்பாக சிதைவடையாமல் கட்சி அமைப்பை, தொழிற்சங்க இயக்கத்தை, கட்டியெழுப்புவது போன்ற விடயங்களில் புலமைத்துவ, செயல் வடிவமான பங்களிப்பை வழங்கியவா.; எமது அனுபவங்களில் 1980களின் முற்பகுதியில் மனித உரிமைக்கான இயக்கங்களிலும், தொழிற்சங்க, அரசியல் இயக்கங்களிலும் தீவிர ஈடுபாடு செலுத்தியவர். அவரது யாழ் நல்லூரடி வீடு எத்தகைய பயங்கர சூழ்நிலையிலும் நாம் பிரவேசிக்கக் கூடிய இடமாக இருந்தது. அங்கு புன்முறுவலுடன் தோழர் பரா எம்மை வரவேற்பாh.; லியோன் ட்ரொட்ஸ்கியின் நூல்களையும, மிலிற்றன் என்ற பத்திரிகையின் பல தொடர் பிரசுரங்களையும் அவர் எமக்கு உவந்தளித்தார். அவர் யாழில் பாடசாலை உயர்தர வகுப்பினருக்கும், பட்டப்படிப்பை மேற்கொள்வோருக்கும் பிரபலமான கணக்கியல்; ஆசிரியரும் கூட. அவர் சிறந்த புகைப்படக் கலைஞராகவும் இருந்தவர்.
அவரது மனைவி மல்லிகா அவர்களும் சோசலிச இயக்கத்தில் ஈடுபட்டவர். அவரது பிள்ளைகள் இருவரையும் சமூக ஈடுபாடுள்ளவர்களாக வளர்த்தெடுத்தவர்.

இனவாத உணர்வுகள் மேலோங்கியுள்ள சமூகத்தில் அவர் மானிட உணர்வுகளை பிரதியீடுசெய்தவர். அவர் வாயப்;பந்தல் போட்டவர் அல்ல. அவர் வாழ்ந்து காட்டியவர்.

“ஒரு மனிதனின் வாழ்வை ஒரு சோக விபத்தோ, திடீர் நோயோ காவு கொள்ளலாம். அவன் வாழும் போது சமூகநீதியை உயர்த்திப் பிடித்தான், வாழ் நாளெல்லாம் அதற்காக அர்ப்பணித்தான் என்ற உரிமையுடன் மரணிக்கவேண்டும்” என்று சோவியத் நாவலாசிரியர் ஒஸ்திரோவ்ஸ்கி சொல்லுவார். தோழர் பரா அவ்வாறுதான் வாழ்ந்தார்.
அவரின் திடீர் மறைவு எம்மை தாங்கொணா வேதனையில் தள்ளியுள்ளது. அன்னாரின் மறைவினால் துயருறும் அவரது மனைவியார் பிள்ளைகளுக்கு உறவுகளுக்கு எம் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்

ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி- பத்மநாபா

0 Kommentare:

Post a Comment