மிக விரைவில் சித்தன் கொட்டில் புதிய வடிவில்!!

Saturday, December 22, 2007

இரா றஜீன்குமார்:

சந்திப்பின் தந்தை


இயற்கை எய்துதல்,
வாழ்வின் முடிவு,
வாழ்வின் அடுத்த பரிமாணம்,
இந்த வார்த்தைகளிடையே
சிக்காத,
எவராலும் விரும்பப்படாத புதிராக
மரணம் வளைய வருகிறது

அன்புள்ள பராமாஸ்ரர்,
இனி உங்களைப் பார்க்க முடியாதென்பதும்
உங்களோடு பேச முடியாதென்பதும்
சாஸ்வதமாய் ஓங்கி அறைகிறது.
"பொழுதே பொய்த்து விடு"
இக்கணம் வரையிலும்
இதைத்தான்
சொல்லத் தோன்றுகிறது

- இரா றஜீன்குமார்,பெர்லின்

0 Kommentare:

Post a Comment