மிக விரைவில் சித்தன் கொட்டில் புதிய வடிவில்!!

Wednesday, December 26, 2007

சிறகுகளை என் நெஞ்சில் அடித்துவிட்டு....

சிறகுகளை என் நெஞ்சில் அடித்துவிட்டு சென்ற சிந்தனையாளனே
இறகு வளராக் குஞ்சுகளாக அன்று ஒரு கூட்டில் வாழ்ந்தோம்
அன்று இடியும் மின்னலும் உரசும் போது என் சிறகுகளுக்குள்
அடைக்கலம் புகுந்தாய்
இன்று உன் நெஞ்சில் இடி விழும்போது ஏன்
என் சிறகுகளை மறந்துவிட்டாய்
ஐயோ, இளவயது நினைவலைகள் என் நெஞ்சை உறுத்துகின்றதே
இன்று வான் நோக்கி சென்று விட்ட என் இனயவனே

அன்று உன் பிஞ்சு கைபிடித்து நல்லூர்
மண்ணெல்லாம் நான் கூட்டி சென்ற கடமை முடிக்கவோ
கால் நூற்றாண்டு கழிந்து கனடா மண் வந்து
என் கைபிடித்து நான் கால் தடம் புரளாமல்
என்னைக் கூட்டிச்சென்றாய்

திரும்ப வருவாய் என்று அல்லவோ இருந்தேன்
திரும்பாத ஊர் போய்விட்டாய்
பாசபந்தங்களில் இரத்த பாசத்துக்கு எல்லை இல்லை.

மாசற்றவனே என் இரத்தம் உறையும் மட்டும்
வாச மலராய் என் இதயத்தில் நீ வீற்றிருப்பாய்.

இரத்தினேஸ்வரி (மூத்த சகோதரி)

0 Kommentare:

Post a Comment