மிக விரைவில் சித்தன் கொட்டில் புதிய வடிவில்!!

Saturday, December 29, 2007

எப்படி ஆறுவேன் அண்ணா?

கண்ணீர் அஞ்சலி


சொந்தத்தின் கவலையை
சொந்தப் பாசையில் சொல்லிக் கதறியழ வைத்துவிட்டாயே
அண்ணா உனக்குத் தங்கையாகக் கால் நூற்றாண்டிற்கு அப்புறமாக
ஒரே தாய் வயிற்றில் பிறந்தேனே.

சின்னக்கால நினைவுகள் சிலையாக என் நெஞ்சில் பதிந்திருக்கின்றன.
எனக்கு நீங்கள் பரிசாகத் தருகின்ற புத்தகங்களும் நல்லூரில் இருந்த போது என்னுடனும் அக்கா பிள்ளைகளுடனும் மொட்டை மாடியில் பட்டம் கட்டி விடும் நினைவுகளும் என் நெஞ்சில் இன்றும் பசுமையாகப் படர்கின்றன.

அந்த நினைவுகள் எல்லாம் என் கண்ணீராய் ஓடுகிறது.
உனக்குத் தீர்க்கதரிசனம் தெரிந்ததோ?
எங்களை விட்டுத் விட்டுத் திரும்பாத இடத்திற்கு போகப் போகிறாய் என்பதற்காகவா இருபத்துநான்கு வருடங்களிற்குப் பின் இரத்த பாசங்களுடன் வந்து நின்று உறவாடினாய்?
என் அண்ணாவே இன்று உன் உறவுகளை கண்ணீரோடு கதற விட்டு மீளாத்துயில் கொள்கிறாயே. நான் எப்படி ஆறுவேன் அண்ணா?

பாசமுள்ள தங்கை மாயா
++++++++++++++++
Dear Mrs.Pararajasingam & the children,

It was with deep sorrow that we took the message regarding the demise of Para. I still remember Para's hurried visit to my place with you all amidst a lot of other commitments. Para's courageous activities in Jaffna during the infamous emergency rule of JRJayawardene in 1978, is vivid in my memories. I can never forget his role during those days. All of you can take pride for having been his closest associates in his untiring social activity for well over four decades.

Our deepest sympathies over his loss not only to you all but also to hundreds of others in whose defence he stood steadfast.

Jeganathan, Sri Lanka
++++++++++++++++++

மாமா மாமா எங்களை ஏன்
விட்டு விட்டுப் போய் விட்டாய்

சின்ன மனதிலே மங்கலான நினைவுகள் எல்லாம்
தந்து விட்டு ஏன் பறந்தாய்
பறந்தாய் ஜேர்மனிக்கு என்று அல்லவா
இருந்தோம்! பறந்தே விட்டாயே

அய்யோ தேடுகின்றோம் எம் இதயங்களை
உலுக்கி, ஏமாற்றி விட்டாய்
சிறு வயதில் எம்முடன் ஓடித் பிடித்து
விளையாடினாய். ஆனால் திரும்பி வந்தாய்
இன்று உன் மனைவியையும் எம்மையும்
கதற விட்டு எங்கு ஒடினாய்…
தேடுகின்றோம்!

மருமக்கள், கனடா
++++++++++++++

இன்று இந்த இறுதிநிகழ்வில்
கலந்தகொள்ளமுடியாமல் போனது
நான் எதிர்பாராத ஒன்று. அதனால்;
எனது இரங்கல்செய்தியை தோழர்
பராவின் இறுதிச்சூழலுக்குள்
அனுப்பிவைத்துள்ளேன்.
---------------------------

புலம்பெயர்ந்து வாழ்தல்
~பாய்விரித்தால் படுத்துறங்கும்
நாய்ச்சாதி| என்று
பழிக்கப்பட்ட
காலங்களை, அதன் ஈழஅறிவினை
தூசாய்த் தட்டிவிட்டது
மாற்றுக் கருத்துக்களின் முளைப்பும்
அதன்
தொடர்ச்சியும் என்பது
நம்பக்க நியாயம். ஆம் இந்த உழைப்பு
ஆரம்பகாலங்களில் வித்தாய்
இடப்பட்டதில் தோழர் பரா
அவர்களின் பணி புகலிடத்தில்
தொடங்கிற்று. சுமார்
இருபைத்தைந்து
ஆண்டுகள் அது சஞ்சிகைகள்,
இலக்கியச் சந்திப்பு,
ஜனநாயகத்துக்கான குரல்கள்,
சந்திப்புகள்,
மனிதஉரிமை மீறல்களின்
அம்பலப்படுத்தல்கள், தலித் மாநாடு...
என பரந்து விரிந்து
செல்வதற்கான வித்தை 80 களின்
ஆரம்பத்தில்
ஊன்றிவளர்த்தவர்களில் பராவுக்கு ஒரு முக்கிய
இடம்
உண்டு.

எமது முந்தைய தலைமுறையாக
அவர் இலங்கையிலேயே இடதுசாரியச்
சிந்தனை முறையில் வளர்ந்து
இயங்கி சாதாரண மனிதவாழ்வின்
எல்லையைத் தாண்டியவர்களில்
அவரும் ஒருவர். இதே செயல்
துடிப்பு புகலிடவாழ்வில்
தொடர்ந்தது. தலைமுறை இடைவெளியை
அழித்தவர் அவர். அடுத்த
தலைமுறையை கோரைப் புற்களாக
பார்க்கும் அனுபவவாத
மிரட்டல்களை அவர் ஒருபோதும்
கற்றுக்குட்டித்தனமாக
எடுத்தவரல்ல. ஒரு நண்பனாக ஒரு
தோழனாக ஏன் ஒரு குழந்தையாகக்கூட
பழகும் வல்லமையும் இயல்பும்
அவரை சிரித்த முகத்துடன்
எம்மிடம் காண்பிக்கும்.
காண்பித்தது.

விடுதலை அரசியல்,
இடதுசாரியச் சிந்தனை என பேசிப்பேசியே
குழுவாதம கொண்டு;
விமர்சனத்தை முட்கம்பிகளில்
தொங்விட்டு இறுதியில்
மனிதாபிமானம்கூட அற்றுப்போன
நிலைகளில்
வாழும் புத்திஜீவிகளிடை பரா
அவர்களின் நேர்மையும்
மனிதநேயமும் பளிச்செனவே தெரிகிறது.
அரசியலை வாழ்வாய்
வரித்துக்கொண்டவர் அவர். இன எல்லைகள்
சாதி எல்லைகளை தாண்டி அவர்
பேசியதைவிட, செய்து
காட்டியது அதிகம்தான். தனது
குடும்பத்தையே அரசியல்மயப்படுத்திய
அவரின் ஆளுமையும்
செயல்நேர்மையும் மதிக்கப்படவேண்டியவை.
இறுதிவரை அதை இயல்பான
வாழ்வாய்
வாழ்ந்து காட்டியவர் பரா
அவர்கள்.

ஒரு மனிதஜீவி மரணித்த சூழல்
அந்த ஜீவியின் நல்அம்சங்களை
உரசிப்பார்த்துவிட
வைத்துவிடுகிறது, அல்லது
கண்டுகொள்ளாமல் இருப்பதை
கண்டுகொள்ள வைத்துவிடுகிறது. பரா
அவர்களின் மரணம்
உரசிக்காட்டியதை இந்த இறுதிஅஞ்சலி
வெளிப்படுத்தி நிற்கிறது. புகலிட
இலக்கியம் உள்ளவரை,
குரல்வளைகளின் மீதான அச்சம்
நிலவும்வரை பரா அவர்களின் நினைவும்
எம்முடன் வாழும்.

பெரிதாக கிழித்துவிடுவதற்கு
எம் மண்டைக்குள்
விரிந்திருப்பது பனை ஓலைகளல்ல... நாம்
வேர்கொண்டு நிற்பது
மனிதஇருப்பின்மீதான அக்கறையில்தான்
என்றபடி உறக்கமுற்ற எம்
தோழர் பரா
அவர்களிற்கு எனது இறுதி
அஞ்சலிகள்!
-ரவி (சுவிஸ்)

++++++++++++++
Memories of Para Uncle

Like a beautiful fall leaf falling off a weak brittle branch, which was once strong, you left the rest of us by ourselves

You were always smiling
Giving us and yourself joy
However, you left happily, leaving us sad

Your presence was always graceful
With joy and happiness, your laughter brought smiles
To all of our faces

Every minute with you was a wonderful moment
You are nice when you play cards
With me, everyday

The time we spent together sharing
Little moments was something
I will treasure the most

Your visit was unexpected, after so many years
You came and brought joy to our families
In many ways possible

You had left unexpectedly and we all wish
To see your joyful smile, just one last time.


From
-Jaianesha, Abinesha, & Krishnesha Elanko
-Jathavan & Rugethan Asohan
25th of December 2007 Maple Canada

0 Kommentare:

Post a Comment