மிக விரைவில் சித்தன் கொட்டில் புதிய வடிவில்!!

Tuesday, December 25, 2007

மின் தமிழ் குழுமம் அஞ்சலிகள்

பரா மாஸ்டர் (அப்படித்தான் நாங்கள் அவரை அழைப்போம்) எப்போதும் புன்னகை
தவழும் முகமுடையவர். இனிமையாகப் பழகுபவர். கருத்து என்று வரும் போது
தீவிரமடைந்துவிடுவார். எத்தனை இலக்கிய சந்திப்புக்கள் உடனிருந்து செயல்
பட்டிருப்போம்! அவரது துணைவி மல்லிகா சிங்களவர். அழகான தமிழ்ப் பெண்ணும்
கூட. அவர்கள் பெண், மாப்பிள்ளை என்று குடும்பமே சமூக ஆர்வலர்கள்.
கூட்டுச் செயல்பாடு உடையவர்கள். மானுட அன்பு கொண்டவர்கள். வன்முறை
எதிர்ப்பாளர்கள். மிகக் கடினமான சூழலில் கூட அயலகதிலிருந்து நாட்டு
விடுதலைக்கு, மானுட சுதந்திரத்திற்குப் பாடு பட்டவர்கள். பரா மாஸ்டர்
இல்லாதது ஐரோப்பிய இலக்கிய சூழலுக்கு கை ஒடிந்தது போல. முதலில் கலைச்
செல்வன், பின் புஷ்பராஜா, இப்போது பரா மாஸ்டர். நண்பர்களை இழந்து கொண்டு
இருக்கிறேன்...
நா.கண்ணன் , nkannan@gmail.com
+++++++++++++++++++++++++++

மதிப்புக்குரி ய திரு பரராஜசிங்கம் அவர்கள் மறைவுக்கு வருந்துகிறோம்
தமிழ் ஆர்வலரான அன்னாரது ஆன்மா சாந்தி அடைய
இறைவனை ப்ரார்த்தனை செய்கிறோம்
அன்னாரது துணைவியாருக்கும் அவரது குடும்பத்தார்
அனைவருக்கும் இறைவன் மனச்சாந்தி அளிப்பானாக
அன்புடன்
தமிழ்த்தேனீ,rkc1947@gmail.com
+++++++++++++++++++++++++++++++


ஐரோப்பிய நாடுகளில் தமிழ் இலக்கிய வட்டங்களை ஏற்படுத்தி சாதனைகள் பல செய்த தமிழ் ஆர்வலர் திரு.பரராஜசிங்கம் அவர்கள் ஜெர்மனியில் காலமனார் என்ற
செய்தியறிந்து வருந்துகிறோம். துணைநலத்தை இழந்து வாடும் அவரது துணைவியாருக்கும் இல்லத்தாருக்கும் தமிழ்த்திணை இணைய இதழ் சார்பிலும், சி.பா.ஆதித்தனார் அனைத்திந்திய இதழியல் கழகம் சார்பிலும் ஆழ்ந்த இரங்கலைத்
தெரிவித்துக்கொள்கிறேன். ''இயற்கை இதுவென தேறுவோம்"
கனத்த நெஞ்சுடன்,
முனைவர் தி.நெடுஞ்செழியன்,tamilthinai@gmail.com
+++++++++++++++++++++++++++

அன்னாரின் மறைவுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கின்றேன்.
திரு. பரராஜசிங்கம் அவர்களின் இழப்பு தமிழ் கூறும் நல்லுலகம் கொண்ட இழப்பு.
வருத்தமுடன்,
இரவா,vasudevan.dr@gmail.com

0 Kommentare:

Post a Comment