மிக விரைவில் சித்தன் கொட்டில் புதிய வடிவில்!!

Tuesday, December 18, 2007

தூ வின் அஞ்சலி


துயரச் செய்தி
பராமாஸ்டர் என அழைக்கப்படும் பரராஜசிங்கம் அவர்கள் நேற்று இரவு தனது 72 ஆவது வயதில் காலமானார். இவர் ஜேர்மனியிலுள்ள பேர்லின் நகரில் தனது புகலிட வாழ்வை மேற்கொண்டு வந்தவர். புகலிட இலக்கியச்சந்திப்பின் ஸ்தாபகர்களில் ஒருவராகவும் 'சிந்தனை' எனும் சஞ்சிகையின் ஆசிரியராகவும் பணியாற்றியவர். இவர் இடது சாதரிச் சிந்தனை கொண்டவராகவும் இலங்கையில் பல தொழிற் கட்சிகளின் வேலைத்திட்டங்களிலும் , அதன் போராட்டங்களிலும் பங்குபற்றியவர்.
பராமாஸ்டர் அவர்கள் தலித் சமூகங்களின் துயரங்களில் அக்கறை கொண்டவராகவும் , சாதிய மேலாதிக்க ஒடுக்குமுறைக்கெதிராகவும் போராடிவந்தவர். கடந்த ஒக்டோபர் மாதம் பிரான்சில் நடைபெற்ற தலித் மாநாட்டில் சிறப்புப் பேச்சாளராகவும் பங்குபற்றியவர். தனது உடல் இயலா நிலைமையிலும் மிகச் சிரமத்துடனேயே தலித் மாநாட்டில் கலந்து கொண்டு சிறப்பித்தவர்.
இவரின் தீடீர் மரணம் பிரான்ஸ் தலித் சமூக மேம்பாட்டு முன்னணி உறுப்பினர்களுக்கும் அதன் ஆதரவாளர்களுக்கும் பேரதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.

0 Kommentare:

Post a Comment