மிக விரைவில் சித்தன் கொட்டில் புதிய வடிவில்!!

Tuesday, December 18, 2007

தேசம்நெற் அஞ்சலிகள்தேசம்
Aruran on December 17, 2007 12:46 pm
தோழர் பராவினருடைய குடும்பத்தின் துயரில் நானும் பங்கு கொள்கிறேன்.
ஆரூரன்

yamuna rajendran on December 17, 2007 2:53 pm
தோழர் பரா அவர்களின் மரணம் அதிர்ச்சியும் துயரும் தரத்தக்கது. அவரது குடும்பத்தினருடன் இரு நாட்களைக் கழித்த நினைவுகள் துக்கத்துடன் மேலெழுகிறது. அன்பும் உபசரிப்பும் வாஞ்சையும் மிக்க குடும்பம் அவருடையது. தாய்மை போலவே தந்தைமையும் ஈடு செய்ய இயலாதது. தந்தைமையின் பிரிவை மிகச் சமீபத்தில் அனுபவத்தவன் என்பதால் வார்த்தைகளால் ஈடு செய்யவியலாத துயர் பராவின் பிரிவு என்பதனை ஆத்மார்த்தமாக உணரமுடிகிறது. அவரது மைந்தனான சந்துசுக்கும் புதல்வியான உமாவுக்கும் அவரது உற்ற துணைவியரான மல்லிகா அவர்களுக்கும் அவரது பிரிவால் துயருறும் தோழர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த அனுதாபத்தையும் ஆறதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
யமுனா ராஜேந்திரன்

Tharman on December 17, 2007 2:55 pm
முற்போக்கு என்பது வியாபாரமாகி விட்ட சூழலில் இறுதி வாழ்வு வரை தன் வாழ்வை ஒடுக்கபட்ட மக்களுக்காகவும் அந்த மக்களின் மனித உரிமைகளுக்காகவும் அர்ப்பணித்த தோழருக்கு என் கண்ணீர் அஞ்சலி. தோழரின் குடும்பத்தார் / உறவினர் / நண்பர்கள் / தோழர்கள் அனைவரோடும் சேர்ந்து அவர்கள் துயரில் நானும் பங்குகொள்கின்றேன்.
தர்மன்

த ஜெயபாலன் on December 17, 2007 3:40 pm
என் கண்ணீர் அஞ்சலி: நண்பர் பரா அவர்களின் மறைவு மிகவும் வேதனைக்கு உரியது. நோய்வாயப்பட்டு இருந்த வேளையிலும் போராட்ட உணர்வு தளர்ந்துவிடாமல் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக குரல் கொடுக்க பரிஸ் வரை அவர் வந்த போதே அவரை முதற் தடவையாக சந்தித்தேன். என்றும் மக்களுக்காகப் போராடத் தயாராக இருந்த அந்த இளைஞனை மீண்டும் ஒரு முறை சந்திப்பேன் என்ற நம்பி;க்கையில் அவசரமான ஒரு உரையாடலை செய்வதை நான் தவிர்த்து இருந்தேன். ஆனால் மீண்டும் சந்திக்க முடியாத நிலை உருவாகும் என நான் எதிர்பார்க்கவில்லை.
அவருடைய இந்த சீரிய வாழ்வுக்கு என்றும் உறுதுணையாக இருந்த அவரது மனைவிக்கும் பிள்ளைகளுக்கும் எனது மனமார்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
த ஜெயபாலன்

நட்சத்திரன் செவ்விந்தியன் on December 18, 2007 2:46 am
நான் பரராஜசிங்கம் பற்றி அறிந்தவைகளைவிட அறியாதவைகளே அதிகம். நல்ல மனிதரும் இடதுசாரியும் என்று கேள்விப்பட்டிருந்தேன். இப்போது நாபா அணியினரின் இரங்கலை வாசிக்கிறபோது அவரைப்பற்றி மேலும் அறியமுடிகிறது. அவரது மறைவின் துயரத்திலும் அன்னாரின் குடும்பத்தார் ஆறுதல் அடையக்கூடிய விடயம் ஒன்று உள்ளது. அவர் நிறைவான வாழ்வு வாழ்ந்து மறைந்திருக்கிறார் என்பதே அது.
-நட்சத்திரன் செவ்விந்தியன், சிட்னி.

mano on December 18, 2007 7:16 am திரு. பரா அவர்களின் மறைவு அதிர்ச்சிதரவில்லை. ஆனாலும் மனது கசிகிறது. பொதுவாழ்விற்காக தன்வாழ்வின் பெரும்பகுதியை அர்ப்பணித்த ஒரு மென்மையான மனிதர். தனது கடைசிக்காலம் வரை தன்து சிந்தனையை நிறுத்தாது தொடர்ந்து வந்தவர். சகல ஜனநாயக போர்க்குரல்களிலும் ஆர்வ்த்தோடு உற்சாகமாய் கலந்து தனது பங்களிப்பை வழங்கி வந்தவர். பெறுமதி மிக்க ஒரு மனிதரின் இழப்பு கவலையைத் தருகிறது. குடும்பத்தினர் நண்பர்களுடன் எனது துயரைப் பகிர்ந்துகொள்கிறேன்.
மனோ

thakshan on December 18, 2007 6:46 pm தோழர் பராவை சந்திக்கும் எந்த வாய்ப்பும் எனக்கு கிடைத்திருக்கவில்லை. ஆயினும் அவரைப் பற்றி நண்பர்கள் ஊடாக அறிந்திருந்தேன். அவரது; ஜனநாயகத்திற்கான போர்க்குரல் இன்று அமைதியாகிவிட்டது எமது சமூகத்திற்கு ஒரு பேரிழப்பே. அவருக்கும் நாம் செலுத்தும் அஞ்சலி அவர் விட்டுச் சென்ற பணியை தொடர்வதே! துயரங்களை பலமாக மாற்றி கொண்டு அவரது நம்பிக்கைகளை வென்றெடுப்போம்.
தக்ஷ்ஷன்

அசோக்-யோகன் கண்ணமுத்து. on December 18, 2007 10:04 pm
எனது தலைமுறையினர் தேர்வுகொண்ட அரசியலில் எதிர்கொண்ட ஏமாற்றங்களும் கசப்பான அனுபவங்களும் எம் கனவின் மீதான நம்பிக்கைகளை தகர்த்தெறிந்திருந்த தருணத்தில் நாங்கள் வரித்திக்கொண்டிருந்த சிந்தனைகளுக்கு ஓரளவு எதிர்கால நம்பிக்கைகளை; செயலூக்கத்தை தரக்கூடிய சக்திகளாக இருந்தவர்களில் தோழர் பராவும் ஒருவர். இத்தகைய ஊக்கவியலாளர்களின் இறப்பு என்பது எதிர்கால, எம் கொஞ்சமான நம்பிக்கைகள் மீது ஒரு அந்நியமாதலை ஏற்படுத்திவிடுகின்றது. நாங்கள் தோற்றுத்தான் போவோமோ என்ற அச்சமும் பயமும் எம்மைத் தொடர்கின்றது.தோழர் பராவுக்கு எனது கனத்த துயர்கொண்ட அஞ்சலிகள்.
மல்லிகா/சந்தூஸ்/உமா/முரளி/சேசக்தி/அன்னம் மற்றும் குடும்பத்தினர் தோழர்கள் நண்பர்கள் உறவினர்களோடு நானும் மனத்துயரில் பங்குகொள்கின்றேன்.
அசோக்-யோகன் கண்ணமுத்து
ashokyogan@hotmail.com

arichandran on December 18, 2007 10:12 pm
பரா அவர்கள் மறைவு புலம் பெயர் இலக்கிய மாற்று கருத்துடையவர்களுக்கும், எழுத்தாளர்கழுக்கும் பேர் இழப்புத்தான். மலையக மக்கள்மீது அவர் செய்த சேவைகள் சொல்லில் அடங்கா. அவரை அனைவரும் அறிவார்கள். நிட்ச்சயமாக தமிழர் வரலாறு எழுதப்படும் போது அவருக்காக சில பக்கங்கள் காத்திருக்கும். ஆகவே அவர் குடும்பம், நண்பர்கள்,உறவினர்கள் துயரத்தில் நானும் பங்கு கொள்கிறேன்.
வணக்கத்துடன். - அரி

periyappu on December 19, 2007 10:22 am
தோழர் குமாரசாமி பரராஐசிங்கம் அவர்களின் மரணச் செய்தி அறிந்து ஆழ்ந்த துக்கம் அடைகின்றோம். நல்லவர்களின் மரணம் எப்பொழுதும் சரித்திரமே. எங்கள் குடும்பத்தின் சார்பில் கண்ணீர் அஞ்சலிகள்.
தோழர் பரராஐசிங்கம் குடும்பத்தினரின் துக்கத்தில் எங்கள் குடும்பமும் பங்குகொள்கின்றது.

0 Kommentare:

Post a Comment