மிக விரைவில் சித்தன் கொட்டில் புதிய வடிவில்!!

Tuesday, December 25, 2007


Abschied


Vor vielen Jahren begegneten wir uns
In der Fremde.
In einem von unserer Heimat so weit entfernten Land
Wir kannten uns vorher nicht.
Als wir uns begegneten,
haben wir uns sofort angefreundet,
es war als ob wir uns schon immer gekannt hätten.

Seitdem betrachteten und beobachteten wir zusammen
die komplizierten und wechselhaften
politischen Entwicklungen in unserer Heimat.
Wir gingen vorwärts hin auf einen Zweck und ein Ziel
mal gingen wir zusammen,
mal gingen wir getrennt.

Wir argumentierten viel, hatten auch Meinungsverschiedenheiten,
aber wir waren uns einig in unserem Ziel.
Gemeinsam erhoben wir unsere Stimme
Gemeinsam gingen und demonstrierten wir
um eine menschenwürdige Gesellschaft zu erreichen.

Lieber Para,
Du warst ein Freund für mich.
Du warst ein Genosse für mich.
Du warst ein Kamerad für mich.
Du warst ein Ratgeber für mich.
Du warst eine Stärke für mich.

Es ist ein unerträglicher Verlust für uns.
Dein unerwarteter Abschied hinterlässt uns voller Trauer.
Wir verabschieden uns von dir,
doch die Erinnerung an dich
bleibt für immer in unseren Herzen.

Lieber Genosse
Lieber Freund
Du bleibst in meiner Erinnerung, bis an mein Lebensende!


Ranjith Henayaka Arachchi.+++++++++++++++

அமைதியான அந்த ஆளுமை சரிந்துவிட்டது.


‘பராமாஸ்ரர்’ என்று அறியப்பட்ட குமாரசாமி பரராசசிங்கம் அவர்கள் எமைவிட்டு பிரிந்துவிட்டார். இடதுசாரி பராம்பரியங்களின் எஞ்சியிருந்த தோழமைகளிலொன்று எமக்கு பிரியாவிடை தந்துவிட்டது. இளமைகாலங்களில் ஒரு தொழிற்சங்கவாதியாக தனது பொதுவாழ்வை ஆரம்பித்த பராமாஸ்ரர் அவர்கள் ஒடுக்கப்பட்ட மக்களின் மீட்சிக்காக தனது 72 வயதின் இறுதி மூச்சுவரை ஓயாது உழைத்தவர். புகலிட இலக்கிய அரசியல் பரப்பில் பராமாஸ்ரர் அவர்களின் பங்கு அளப்பரியது. இலக்கியசந்திப்பின் தொடர்ச்சி, வளர்ச்சி, சாதனை என்று எதை பட்டியலிட்டாலும் இவரது பங்கின்றி அவை சாத்தியமில்லை எனலாம். தமிழ் மக்களின் விடுதலை என்பதை ஒரு விரிந்த, பரந்த, அகன்ற ஒரு பார்வையோடு அணுகியவர் அவர். ஐரோப்பிய மட்டத்தில் சந்திப்பு, கூட்டம் என்று எந்தவொன்றிலும் மலையக தோட்ட தொழிலாளர்கள் பற்றிய ஒரு குரல் ஒலிக்கின்றது என்றால் அங்கே பராமாஸ்ரர் எனும் உருவம்தான் முன்னால் தெரியும். அதேபோன்று முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளை தொடர்ச்சியாக கண்டித்து வருபவராக முஸ்லிம்களின் வரலாறு, வாழ்வு, அரசியல் பாரம்பரியம் என்று அத்தனையையும் விரல் நுனி தகவல்களாக கொண்டு திரியும் ஒரு நடமாடும் நூலகமாக அவர் வாழ்ந்திருந்தார். முஸ்லிம்கள், கிழக்கிலங்கை மக்கள், தலித் மக்கள் என்று தமிழ் சமூகத்தின் விரவிகிடக்கும் அகமுரண்பாடுகள் தீர்க்கப்படும் நாள்தான் தமிழ் மக்கள் விடுதலையடையும் நாள் என்று திடமாக கூறி அதை நோக்கியே தனது செயற்பாடுகளை வகுத்து கொண்டவர் அவர். யாழ்மையவாதத்திற்கெதிரான எமது போராட்டத்தின் ஆளுமை மிகு தூண்களிலொன்று சரிந்து விட்டதாகவே அவரது மரணத்தை நாம் உணருகின்றோம்.


"விழிப்பு-இணையத்தளம்"

0 Kommentare:

Post a Comment