மிக விரைவில் சித்தன் கொட்டில் புதிய வடிவில்!!

Tuesday, December 18, 2007

Condolences

உயிர்நிழல் அஞ்சலி!

புகலிட இலக்கியச் சந்திப்பின் நிறுவன கர்த்தாக்களில் முக்கியமானவரும், எண்பதுகளின் சிறுசஞ்சிகைகளின் பரப்பில் ‘சிந்தனை’யின் ஆசிரியரும், புகலிட அரசியல் களத்தில் மிகவும் உற்சாகமாகவும் சுறுசுறுப்பாகவும் தன் பங்கை இறுதிவரை ஆற்றிக் கொண்டிருந்த எங்கள் தோழர் பரா அவர்கள் இன்று எம்முடன் இல்லை. 2007 ஆண்டு டிசம்பர் மாதம் 16 ஆம் திகதி பின்னிரவில் இவர் எங்களை விட்டுப் பிரிந்து சென்றுவிட்டார்.
73வயதாகிய தோழர் பரா எவ்வயதினருடனும் தோழமையுடன் உறவாடும் பண்புள்ளவராகவிருந்தார். எந்தச் சந்திப்புகளிலும் உற்சாகத்துடனும் சோர்வற்றும் கலந்து கொண்டிருந்தார். புகலிட அரசியல் இலக்கியப் பரப்பில் ஈடு செய்யப்பட முடியாத இழப்புகளின் தொடர்ச்சியில் இப்போது தோழர் பராவும் அடக்கம்.
தோழர் பரா பற்றிய அவசரமான குறிப்பொன்றுடன் உயிர்நிழல் தனது தோழமையான அஞ்சலியைச் செலுத்திக் கொள்கிறது. இந்த வெறுமையான கணமொன்றில் மல்லிகா, உமா, முரளி, சந்தூஸ் ஆகியோரின் மனச்சுமையிலும் உயிர்நிழல் பங்குபற்றிக் கொள்கிறது.

உயிர்நிழல்
+++++++++++++++++++++++++++
We will always remember you as a symbol of courage and perseverance. Your ever cheerful, peaceful and contented attitude showed us all how best to live and to tackle the more serious problems of life. You will remain in our thoughts and hearts for ever.

With deepest sympathy,
Ruwandi Silva,München
++++++++++++++++++++++++++++++++
We have lost a friend and comrade whose activities always long termed and beyond our horizon.
His whole life was dedicated to one aim, the equality.
We miss him.

Vasu
Thavaganeshan Vasuthevan
0049 172 67 10109
Berlin
++++++++++++++++++++++++++++++

Dear Suseendran,

Please convey my deepest sympathies to the family of Para, including Maya in

Canada.

May his soul Rest In Peace.

K.Suntharalingam, Sri Lanka, consultant@mymail.lk
+++++++++++++++++++++++++
உயிர்மெய்

பானுபாரதி& தமயந்தி, நோர்வே


*************************
I prefer to appreciate when one is around - but the loss of Para Master - would be felt by friends from Sri Lanka especially those abroad - visiting Berlin - who would have found in him a friendly, soft spoken and pleasant person. He was constant in his dedication to the continuation of Elakiya Chanthippu in Europe and his hobby of Photography amongst other activities.

Courage to Mallika and the family friends who would miss him indeed

Mani Suprayan (at present in Sri Lanka)


+++++++++++++++++
I know he was not feeling well, but the sudden heart attack he suffered brought an end to this wonderful man that was too soon.we have lost a good friend and comrade whose activities always with us .You will remain in our thoughts and hearts for ever.


With warmest regards,
Dimuth Sepalage
*********************
From M.Y.M.Siddeek
He is a wonderful man. Please convey my deepest sympathies to his wife Malika and his children.

With thanks,
Siddeek,London

+++++++++++++++++++++

சிந்தனைப் பரா அவர்களுக்காக நெஞ்சோடு நெருங்கி...

தமிழ் பேசும் மக்களின் தலைவிதியை, எவரெவரோ தீர்மானிக்கும் அரசியலாக முன்னெடுக்கப்படுவதில் அந்தக் குறிப்பிட்ட மக்களே இப்போது பலியாகி வருகிறார்கள்.மக்களின் அதீத வாழ்வாதாரத் தேவைகளுக்காக-இலங்கையில் யுத்தத்தை நிறுத்து என்று ஓங்கியொலித்த ஒரு குரல் ஓய்ந்து-பந்திகொள்கிறது!,தோழர் புஷ்பராஜாவுக்குப் பின் புலம் பெயர் சூழலில் இன்னொரு ஆளுமையை நாம் இழக்கிறோம்! மிக அமைதியான மனிதரும்,கருத்தாளுமை மிக்க சிந்தனையாளருமான தோழர், சிந்தனைப் பரராஜசிங்கம் அவர்கள் 16.12.2007 காலமாகியதைத் தோழர் இரயாவின் மூலமாகவே நான் முதலில் தெரிந்து,அறியக்கூடியதாக இருந்தது.

எனக்கும் சிந்தனை ஆசிரியருக்குமான தொடர்பு 1989ஆம் வருடமே ஆரம்பமாகிறது.தெரியாதவரைக்கூடத் தெரிந்தவராகக் கருதிப் பழகும் அவரது முதற் சந்திப்பே எனக்குச் சுகமான அநுபவமாக இருந்தது.அவருக்கும் எனக்குமான வயது வித்தியாசம் காரணமாக நான் அவரை"ஐயா"என்றே அழைப்பதுண்டு!எனது தந்தையாரைப் பார்ப்பதுபோன்றவொரு உணர்வு அவ்வப்போது எழுவதுண்டு.மல்லிகா அம்மாவையும்,பரா மாஸ்டரையும் 89 ஆம் ஆண்டு அவர்களது (முன்னர் வதிந்த) ஸ்ரூட்கார்ட் வீட்டினில் சந்தித்த காலம் கண் முன் விரிகிறது!

எந்த வயது வித்தியாசமுமின்றி அந்த அறிஞர் என்னோடு உலக சோசலிசப் போக்குகள்-விஞ்ஞானத்தின் இருப்போடு நிலைபெறும் முதலாளிய வியூகம் குறித்தெல்லாம் நீண்ட நேரம் விவாதித்தார்.மிக எளிமையான மனிதர்.இறுதியாக அந்த மனிதனை கலைச் செல்வனின் மரண இறுதி நிகழ்வில் பாசத்தோடு முத்தமிட்டேன்.அதன் பிறகு அவரைக் காணேன்!

இப்போது, நம்மிடமிருந்து பரிபூரணமாக விடைபெற்றுச் சென்றுவிட்டார்!

நான், அவரோடு இலக்கியச் சந்திப்பு நிகழ்வைக் குறித்த அவரது பார்வைகளோடு முரண்பட்டிருக்கிறேன்.எனினும்,அவர்மீதும்,அவரது நாணயத்தின்மீதும் மிகவும் மதிப்பை என்றும் வைத்திருந்தே வந்திருக்கிறேன்.தான் கொண்ட அரசியல் வாழ்வுக்கு மிக உண்மையாகவும்-மக்களின் உரிமைகளைத் தனது வாழ்வுக்காக வளம் சேர்க்கும் மூலதனமாக்காது என்றும் மக்கள் நலப் போராளியாகவே பரா அவர்கள் வாழ்ந்துள்ளார்கள்.

மகத்தான பணிகள் நம் முன் கிடக்கிறது.இதை மிக நேர்த்தியாக அறிந்தவர் பரா அவர்கள்!

எனவே,அதுள் தன்னால் முடிந்தவரை-தனது எல்லைக்குட்பட்டவரை பரா அவர்கள் பணியைத் தொடர்ந்திருக்கிறார்கள்.இந்தப் பணியின் தொடராக அவர் புலம் பெயர்ந்த மக்கள் மத்தியில் "பெருந்தாக்கஞ் செய்த எண்ணங்கள் சஞ்சிகை" நின்ற பின் சிந்தனை எனும் சஞ்சிகையைத் தொடராக வெளிக்கொணர்ந்து, நம் எழுத்துகளுக்கெல்லாம் களம் அமைத்தார்.நான் அறியப் படைப்பாளிகளை முழுமையாக வெளிப்படுத்தியவர் சிந்தனைப் பரா அவர்கள் மட்டுமே.தனக்கு முரண்பாடாக அல்லது உடன்படாதவற்றைக்கூடத் தனது பத்திரிகையில் கத்திரிவைக்காது பிரசுரித்தவர் அவர்மட்டுமே.

பெரும் ஜனநாயகப் பண்புமிக்க நாணயமான மனிதர் என்பதற்கு அவரது அணுகு முறையே சாட்சிபகர்பவை.

ஆனால்,இலக்கியச் சந்திப்பில் அவரது போக்குகள்,ஆளுமைகள் குறித்து விமர்சனங்கள் எனக்குள் உண்டு.அது கடந்த அவரது அரசியல் நிலைப்பாட்டிலும் இருக்கிறது.என்றபோதும், ஒரு அற்புதமான நட்புள்ளங்கொண்ட நல்ல பெரியவரை இழந்தது மனதுக்குக் கஷ்டமாகவே இருக்கிறது.அவரோடான உளப்பூர்வமான உறவுற்ற தரணங்கள் நெஞ்சில் விரிகிறது.அந்த நெஞ்சோடு நல்ல மனிதரைக் குறித்த நிறைந்த ஞாபகங்கள் உணர்வைப் பிழிந்து,விழிகளைக் கசக்கவைக்கின்ற இந்த அவரது மரணம் மிகவும் வலிக்கிறது.

இலங்கைத் தமிழ்பேசும் மக்கள் தமது சமூக சீவியத்தைப் பெரிதும் அழியவிட்டுத் தகர்ந்த சமூக வாழ்வை அரைகுறையாக மீட்டு வாழ்ந்து,உயிரைப் பிடித்திருக்கும் இந்தச் சூழலில், அவர்களின் வாழ்வாதாரங்களைக் காப்பதற்கும்,அதை மீளக்கட்டியொழுப்பி அவர்களின் உயிர் வாழ்வை உறுதிப்படுத்தும் ஜனநாயகப் பண்புகளைக் கோரிக் கொள்ளவும்- குடிசார் மதிப்பீடுகளை நிறுவிக் கொள்ளும் குடியியல் முறைமைகளை நோக்கிய- இராணுவ,பொலிஸ் முகாம்கள் அகற்றப்பட்டு, வாழ்விடங்கள் மறுபடி மக்கள் வாழும் ஆதாரங்களாக நிறுவிக் கொள்ளும் முன் நிபந்தனைகளை வைத்துத் தினமும் கருத்தாடியவர் சிந்தனை ஆசிரியர் பரா அவர்கள்.யுத்தைத் நிறுத்தக் கோரித் தன் வலுவுக்கு உட்பட்டவரைத் தன் துணைவி மல்லிகா அம்மாவோடு இணைந்து படைப்புகள் கருத்துக்கள் எனத் தொடர்ந்து எழுதியும் உரையாடியும் வந்தவர்.இவரது பிரிவில் நானும் துயருறுகிறேன்,அவர்களது குடும்பத்தவர்களைப் போலவே!


மல்லிகா அம்மாவுக்கும்
அவர்களின் குழந்தைகளான உமா சானிகா
சந்துஷ் ஆயோருக்கு எனது ஆழ்ந்த அனுதாபம் உண்டு!

மக்களின் அதீத மானுடத் தேவையான உணவு,உடை,உறையுள் யாவும் இலங்கையின் யுத்தப் பிரதேசங்களில் வாழும் மக்களுக்கு கைக்கெட்டாத கனியாக்கப்பட்டுள்ளது.இதனால் யுத்தத்துக்குள் வாழும் தமிழ் பேசும் மக்களின் அதீத மனிதாயத் தேவையாக இருப்பது அவர்களது உயிர்வாழும் வாழ்வாதாரங்களே என்று அடிக்கடி கூறிக் கொண்டவரும்,தனது அரசியல் வாழ்வை உலகத் தொழிலாளவர்க்கத்துக்குள் இறுகப் புதைத்தவரும் தோழர் பரா அவர்கள்.எமது சமுதாயத்தில் நிலவும் மிகக் கொடூரமான கருத்தியல் ஒடுக்குமுறைக்கு-ஜனநாயக மறுப்புக்கெதிராகத் தொடர்ந்து போராடிய,மறுத்தோடிப் போராளியின் வாழ்வு நிறைவு-உலகத்தின் மூலத்தோடான இணைவு எம்மை மிகவும் பிரமிக்க வைப்பது.அந்த வகையில் சிந்தனைப் பரா வெற்றியாளனே!

அவரோடு கருத்தாடி,முரண்பட்டு,"ஐயா"என்று உறவுற்று வந்திருக்கிறேனென எண்ணும்போது பெருமிதமாக இருக்கிறது.

"வாருங்கள்"

"இருங்கள்"

"சுகமாக இருக்கிறீர்களா?" -

என்று மிகப் பெரிய மனிதருக்குக் கொடுக்கும் மரியாதையை எனக்கு-எமக்குத் தந்தவர் பரா அவர்கள்.எந்தப் பொழுதிலும் புன்னகை குவிந்த முகத்தோடு தந்தையாக எனக்கு முன் விரிந்த அவரது உடல் இன்று இயங்காது பேழையுள் உறங்குகிறது!

அவருக்கு எனது செவ்வஞ்சலி! ஆழ்ந்த கவலையோடு, ப.வி.ஸ்ரீரங்கன்18.12.2007

0 Kommentare:

Post a Comment