மிக விரைவில் சித்தன் கொட்டில் புதிய வடிவில்!!

Thursday, January 08, 2009

சன்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க சுட்டுக்கொலை

The Sunday Leader Editor Lasantha Wickaramathunga shot dead

மிகத் துணிச்சலான இலங்கைப் பத்திரிகையாளன் என அறியப்பட்ட „சன்டே லீடர்“ (The Sunday Leader) பிரதம ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க(Lasantha Wickaramathunga) இன்று காலை அவரது அலுவலக வரவின் போது சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
கடந்த காலங்களில் அவரது „சன்டே லீடர்“ (The Sunday Leader) பத்திரிகைக் காரியாலயம் சேதமாக்கப்பட்டது; லசந்த விக்ரமதுங்க அவர்கள் ஒருமுறை சுடப்பட்டு உயிர்தப்பியவர். பின்னர் அவரைக் கைது செய்து சிறைவைப்பதற்கும் அனேக முன்னெடுப்புக்கள் மேற்கொள்ளப்பட்டன. அவர் மீதான கொலை அச்சுறுத்தல்கள் தொடர்ந்து கொண்டேயிருந்தது. ஆனாலும் அஞ்சாது தனது பத்திரிகையினைத் தொடர்ந்து நடாத்திக் கொண்டிருந்தார். இன்றைய ஆட்சிப் பீடத்தில் உள்ள அரசியலின் ஊழல்கள், நீதி மற்றும் அதிகார துஸ்பிரயோகங்களை வெளியுலகத்திற்குக் கொண்டுவருவதில் மிகத் துணிச்சல் காட்டியவர் லசந்த விக்கிரமதுங்க அவர்கள்.
கொழும்பைச் சேர்ந்த பிரபல அரசியல் வாதியும் கொழும்பு நகர பதில் நகரபிதாவாக இருந்த ஹறிஸ் விக்கிரமதுங்க அவர்களின் மகனான லசந்த விக்கிரமதுங்க சிறுவயதில் இருந்தே அரசியல் மற்றும் பத்திரிகைத் துறையில் ஈடுபாடுகொண்டவர். திருமதி ஸ்ரீமாவோ பண்டார நாயக்காவின் எதிர்கட்சித் தலைவர் பதவிக் காலத்தில் அவரது செயலாளராகவும் செயற்பட்டவர்.

0 Kommentare:

Post a Comment