மிக விரைவில் சித்தன் கொட்டில் புதிய வடிவில்!!

Friday, January 16, 2009

பெர்லின் சர்வதேசத் திரைப்பட விழாவில் தமிழ்த் திரைப்படம்2009 பெப்ரவரி மாதம் 5ம் திகதி தொடக்கம் 15ம் திகதி வரை ஜெர்மனி- பெர்லினில் 59 ஆவது சர்வதேசத் திரைப்பட விழா <<பெர்லினால>> நடைபெறுகின்றது. இவ்விழாவில் ‘என் வீட்டின் முற்றத்தில் ஒரு மாமரம்’குறும் படம் நான்கு நாட்கள் திரையிடப்பட இருக்கின்றது. பிரான்ஸில் வாழும் ரவீந்திரன் பிரதீபன் அவர்களின் இயக்கத்தில் உருவான இக் குறும்படம் நூற்றுக்கும் அதிகமான குறும்படங்களில் இருந்து இறுதிச் சுற்றுத் தேர்வுக்காகவும் தெரிவுசெய்யப்பட்டுள்ளது. இறுதித் தேர்வில் பதினொரு குறும்படங்கள் மட்டுமே பங்குகொள்கின்றன

என் வீட்டின் முற்றத்தில் ஒரு மாமரம் என்ற இக் குறும்படம் பிரான்ஸில் இருந்து வெளிவருகின்ற உயிர்நிழல் சஞ்சிகையை வெளியிடும் «எக்ஸில் இமாஜ்» இனால் தயாரிக்கப்பட்டுள்ளது. குறும்படத்தின் இயக்குநர் ரவீந்திரன் பிரதீபன் அவர்கள் ஒரு தேர்ந்த புகைப்படக் கலைஞர். இக்குறும்படமே இவர் இயக்கிய முதலாவது திரைப்படம்.
இலங்கையின் இக்காலச் சூழலில் நடைபெறுகின்ற , காணாமல் போதல், சிறுவர்கள் படையணிகளில் சேர்க்கப்படல், பெண்கள் மற்றும் பெண்குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை மற்றும் மனித விழுமியங்களின் அழிப்பு போன்றவற்றை இக் குறும்படம் நுணுக்கமான குறியீடுகளுடன் சொல்லிப் போகின்றது.ஒரு தலைமுறையின் சிதைக்கப்பட்ட கனவுகளைப் பேசுகின்றது.<<பேர்லினால>> சர்வதேசத் திரைப்படவிழாவானது 1951 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டது. தொடர்ந்து பத்து நாட்கள் வருடாந்தம் நடைபெறும் இத் திரைப்படவிழாவில் சுமார் ஐந்து இலட்சம் பார்வையாளர்கள், சுமார் 125 நாடுகளைச் சேர்ந்த 16000 க்கும் அதிகமான திரைத்துறை சார்ந்த நிபுணர்கள், கலைஞர்கள், நடிகர்கள் மற்றும் 4000 க்கும் அதிகமான பத்திரிகையாளர்கள் கலந்து கொள்கின்றனர்.
இவ்விழாவின் இறுதியில் போட்டியில் வெற்றி பெறும் முதலிரண்டு முழுநீளத் திரைப்படங்களுக்கும் மற்றும் முதலிரு குறும்படங்களுக்கும் தனித்தனியே ‘தங்கக் கரடி’, ‘வெள்ளிக் கரடி’ விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. ‘கரடி’ தலைநகர் பேர்லின் நகரத்தின் கொடிச்சின்னமாகும். இத் திரைப்படவிழாவின் 59 வருடகால வரலாற்றில் இறுதிப் போட்டிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் தமிழ்த் திரைப்படம் என்கிற பெருமையும் இக்குறும்படத்திற்கு வந்துசேர்ந்துள்ளது.மிருணாள் சென், சத்யஜித்ரே, அடூர் கோபாலகிருஷ்ணன், ஆனந்த் பட்டவர்த்தன், விஸ்வநாதன், மீரா நாயர், மணிரத்தினம் போன்ற இந்திய இயக்குநர்களை இவ்விழா கௌரவித்திருக்கின்றது. மேலும் இவர்களில் சிலர் தேர்வு நடுவர்களாகவும் மீரா நாயர் அவர்கள் தலைமை நடுவராகவும் இருந்திருக்கிறார்கள். இன்று இலங்கையில் நிலவுகின்ற நெருக்கடியான காலகட்டத்திற்கு ஏற்ற கருவை உள்ளீடாகக் கொண்டிருப்பது இக் குறும்படத்தின் சிறப்பம்சமாகும்.

Screenings schedule/திரையிடப்படும் விபரங்கள்

'A mango tree in the front yard'


Friday-வெள்ளி, 06.02.2009, 22:00

CinemaxX3

Potsdamer Platz
Potsdamer Straße 5
10785 Berlin

U/S-Bahn: Potsdamer Platz


Sunday-ஞாயிறு, 08.02.2009, 17:30

Colosseum

Schönhauser Allee 123
10437 Berlin
Tel.: 030 44018-180

U/S-Bahn: Schönhauser Allee


Tuesday-செவ்வாய், 10.02.2009, 16:00
(Only for journalists/இக் காட்சி சர்வதேச பத்திரிகையாளர்களுக்கு மட்டுமே காண்பிக்கப்படுகின்றது)

CinemaxX6

Potsdamer Platz
Potsdamer Straße 5
10785 Berlin

U/S-Bahn: Potsdamer PlatzSamstag-சனிக்கிழமை, 14.02.2009, 22:00

CinemaxX3
Potsdamer Platz
Potsdamer Straße 5
10785 Berlin

U/S-Bahn: Potsdamer Platz

இன்னும் விபரங்கள் அறிய:
"A Mango tree in the front yard"
சித்தன் கொட்டில்
இலங்கை தமிழ் சங்கம்
Tamil Sydney
ஜீவா ஓவியக்கூடம்
விமர்சனம்-ஜமுனா ராஜேந்திரன்
தேசம்:பேர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் புலம்பெயர்ந்தவரின் குறும்படம்:த ஜெயபாலன்
Alaikal e-news
தமிழ் ஸ்டூடியோ

0 Kommentare:

Post a Comment