மிக விரைவில் சித்தன் கொட்டில் புதிய வடிவில்!!

Saturday, May 16, 2009

சரித்திரத்தின் முடிவிதுதான்!!

இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ அவர்கள் ஜோர்டானில் இருந்து விட்டிருக்கும் „பயங்கரவாதம் மூற்றாக ஒழிக்கபட்ட என் நாட்டுக்கு நான் திரும்பி வருகிறேன்“ என்ற அறிவிப்பும், திங்கள் திரும்பவேண்டியவர் ஞாயிறு அன்றே அவசர அவசரமாகத் திரும்புவதும் நாளை ஞாயிறு காலை நாட்டுமக்களை நோக்கிப் பேச இருப்பதும் பிரபாகரன் உயிருடனோ அல்லது இறந்தோ வெல்லப்பட்டுவிட்டார் என்பதையே சுட்டி நிற்கின்றன.

பிரபாகரன்

பிள்ளைகாள்

வேலுப்பிள்ளை பிரபாகரன் எப்போது பிறந்தான்

என்று கேட்கிறார் ஆசிரியர்

ஆயிரம் ஆண்டுகள் முன்பு என்றனர் பிள்ளைகள்

நூறு ஆண்டுகள் முன்பு என்றனர் பிள்ளைகள்

சென்ற ஆண்டு என்றனர் பிள்ளைகள்

எவருமே அறியார்

பிள்ளைகாள்

வேலுப்பிள்ளை பிரபாகரன் என்ன செய்தான்

என்று கேட்கிறார் ஆசிரியர்

ஒரு போரை வென்றான் என்றனர் பிள்ளைகள்

ஒரு போரைத் தோற்றான் என்றனர் பிள்ளைகள்

எவருமே அறியார்

எங்கள் கசாப்புக் கடைக்காரனிடம்

பிரபாகரன் என்றொரு நாய் இருந்தது

கசாப்புக் கடைக்காரர் அதை அடிப்பார்

ஒரு ஆண்டு முன்னர் அது பட்டினியாற் செத்தது

என்றான் சதீஷ்

இப்போது எல்லாப் பிள்ளைகளும்

பிரபாகரனுக்காக வருந்துகின்றனர்.

-மிரோஸ்லாவ் ஹொலுப்

மூன்றாங்கையாகத் தமிழில் தழுவல்: சுகன்

(2002)
NapoleonChildren, when was

Napoleon Bonaparte born,

asks the teacher.Thousand years ago, the children say.

Hundred years ago, the children say.

Last year, the children say.

Nobody knows.Children, what did

Napoleon Bonaparte do,

asks the teacher.

He won a battle, the children say.

He lost a battle, the children say.

Nobody knows.

At us the butcher had a dog

František says,

he was called Napoleon.

The butcher used to beat him, and the dog died

of hunger

last year.

And now all the children feel sorry

for Napoleon.-Miroslav Holup

(1960)

3 Kommentare:

 1. இந்த கவிதை என்னக்கு புரியவில்லை

  ஏன் பிள்ளைகள் நாய்க்காக வருந்துகின்றனர் ?(நாய்க்காக என்றால் சரி)

  ReplyDelete
 2. he was called Napoleon.
  your translation was wrong. It never dog's name is nepolian. but u said dog's name is... it might be your crualness from your bottom of you heart.

  ReplyDelete
 3. பிரபாகரன் ஒரு வீரத்தமிழன் அவருக்கு ஒருபோதும் இறப்பில்லை. சிங்கள நாய்கள் இன்று கொக்கரிக்கிறது. காத்திருங்கள் மீண்டும் பதில் சொல்லுவோம்

  ReplyDelete